முகப்பு
தற்போதைய செய்திகள்

கீரமங்கலம் அருகே லாரி மோதி இளைஞர் சாவு

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே சனிக்கிழமை மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே சனிக்கிழமை மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் சகாபுதீன் மகன் அம்சத்(18).இவர், அறந்தாங்கியில் இருந்து கீரமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சனிக்கிழமை தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.அவர் குளமங்கலம் கடைவீதி அருகே சென்றபோது, எதிரே வந்த மணல் லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், அம்சத் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து கீரமங்கலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →