தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் நூலகங்களுக்கு புத்தக அலமாரிகள் வழங்க ரூ.6.50 லட்சம் ஒதுக்கீடு

மாவட்ட மைய நூலகம் உள்பட கிளைநூலகங்களில் புத்தகங்களை தரையில் அடுக்கி வைப்பதால் செல்லரித்து பாதிக்கும் நிலையிருந்தது குறித்து தினமணி நாளிதழில் செய்தி பிரசுரம் ஆனாதை

எஸ். பாண்டியன்

மாவட்ட மைய நூலகம் உள்பட கிளைநூலகங்களில் புத்தகங்களை தரையில் அடுக்கி வைப்பதால் செல்லரித்து பாதிக்கும் நிலையிருந்தது குறித்து தினமணி நாளிதழில் செய்தி பிரசுரம் ஆனாதை தொடர்ந்து நூலகங்களுக்கு அலமாரிகள் வழங்குவதற்கு ரூ.6.50 லட்சம் ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.   

விருதுநகர் மாவட்ட மைய நூலகத்தில் 1.50 லட்சம் நூல்கள் உள்ளன. இதில், 16 ஆயிரம் பேர் உறுப்பினகள் உள்ளனர். இந்நூலகத்தின் கட்டுப்பாட்டில் 94 கிளை நூலகங்கள், 46 ஊர்ப்புற நூலகங்கள் மற்றும் அதைச் சார்ந்து இயங்கும் பகுதி நேர நூலகங்களும் உள்ளன. ஆனால், அதிகமான புத்தங்கள் புதிதாக வந்த நிலையிலும், கடந்த 3 ஆண்டுகளாக அலமாரிகள் வழங்காத காரணத்தால் தரையில் பண்டல்களாக அடுக்கி வைத்திருந்தனர். இதனால், புத்தகங்களை பாதுகாக்க முடியாமல் செல்லரித்து போகும் நிலை இருந்தது. மேலும், வாசகர்கள் மற்றும் அரசு தேர்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயராகும் பட்டதாரிகளும் புதிதாக வந்த புத்தகங்களை எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாக புகார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கடந்த 10-ம் தேதி தினமணி நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளியானது. அதைப் பார்த்து அதிகாரிகள் அரசுக்கு தெரிவித்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் ராஜராம்மோகன்ராய் அறக்கட்டளை மூலம் ரூ.6.50 லட்சம் ஒதுக்கப்பட்டு, முதல் கட்டமாக 67 அலமாரிகள் நூலகங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து நூலகங்களுக்கும் படிப்படியாக வழங்க ஏற்பாடு செய்ய இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT