முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி கடல் பகுதியில் தத்தளித்த 7 மீனவர்கள் மீட்பு

தூத்துக்குடி கடல் பகுதியில் தத்தளித்த திரேஸ்புரத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை கடலோர காவல் படையினர் ஞாயிற்றுக்கிழமை மீட்டனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:01 AM
பகிர்:

தூத்துக்குடி கடல் பகுதியில் தத்தளித்த திரேஸ்புரத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை கடலோர காவல் படையினர் ஞாயிற்றுக்கிழமை மீட்டனர்.

 தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த அமல்ராஜ் என்பவருக்குச் சொந்தமான ஜெபின் புஷ்பா என்ற நாட்டுப்படகில் 7 மீனவர்கள் கடந்த 14 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.  18 ஆம் தேதி இரவுக்குள் அவர்கள் கரை திரும்பி இருக்க வேண்டும் என்ற நிலையில் 7 பேரும் கரைக்கு வராததால் அவர்களது உறவினர்கள் அச்சமடைந்தனர்.

 இதற்கிடையே, என்ஜின் பழுது காரணமாக படகு தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் இருந்து வடகிழக்கே 21 கடல் மைல் தொலைவில் நிற்பதாக படகில் இருந்த மீனவர்கள் சக மீனவர்கள் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

 இதையெடுத்து, சென்னையில் உள்ள மீன்வளத் துறை இயக்குநர் அலுவலகம் மூலம் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலோர காவல் படைக்குச் சொந்தமான அபிராஜ் ரோந்துக் கப்பலில் மீனவர்களை தேடும் பணி நடைபெற்றது.

 மீனவர்களின் இருப்பிடத்தை அறிந்த கடலோர காவல் படையினர் 7 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கினர். பழுதான நாட்டுப் படகையும் பத்திராமாக மீட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை புதிய துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர், 7 பேரும் திரேஸ்புரம் அழைத்துச் செல்லப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.