முகப்பு
தற்போதைய செய்திகள்

மாணவர்களுக்கு வழங்கிய சைக்கிள்களை திரும்ப வாங்கியதால் மாணவர்கள் அதிர்ச்சி

கூடலூரில் சட்டப்பேரவை உறுப்பினர் தங்க.தமிழ்செல்வன் தலைமையில் திங்கட்கிழமை மாணவர்களுக்கு வழங்கிய சைக்கிள்களை செவ்வாய்கிழமை திரும்ப பள்ளி நிர்வாகம் வாங்கி கொண்டதால் மாணவர்கள் கவலை அடந்துள்ளனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:17 AM
பகிர்:

கூடலூரில் சட்டப்பேரவை உறுப்பினர் தங்க.தமிழ்செல்வன் தலைமையில் திங்கட்கிழமை மாணவர்களுக்கு வழங்கிய சைக்கிள்களை செவ்வாய்கிழமை திரும்ப பள்ளி நிர்வாகம் வாங்கி கொண்டதால் மாணவர்கள் கவலை அடந்துள்ளனர்.

 கூடலூர் அரசு உதவி பெறும் பள்ளியான என்.எஸ்.கேபி மேல்நிலைப்பள்ளியில், பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 280 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா திங்கட்கிழமை நடைபெற்றது. விழாவில், நகராட்சி தலைவர் ஆர்.அருண்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் தங்க.தமிழ்செல்வன் தலைை வகித்து, மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை மாணவ-மாணவியர்களுக்கு வழங்கினர்.

இந்நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து மாணவர்களுக்கு திங்கட்கிழமை வழங்கப்பட்ட சைக்கிள்களை மீண்டும் வாங்க உத்தரவிட்டதாகவும், மாணவர்களிடம் அனைத்து சைக்கிள்களையும் பள்ளி நிர்வாகம் திரும்ப பெற்றுக்கொண்டனர். இதனால், மாணவர்களும், பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து முறையான தகவல் சொல்லாததால் பள்ளி நிர்வாகம், மாணவர்களும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.