தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே கல்வி விழிப்புணர்வு பிரச்சார இயக்க  தொடக்க விழா

விருதுநகர் மாவட்ட தேசிய குழந்தை தொழிலாளர் நலத்திட்டம் மற்றும் நாகலட்சுமி அறக்கட்டளையும் இணைந்து கல்வி விழிப்புணர்வு பிரச்சார இயக்க தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்ட தேசிய குழந்தை தொழிலாளர் நலத்திட்டம் மற்றும் நாகலட்சுமி அறக்கட்டளையும் இணைந்து கல்வி விழிப்புணர்வு பிரச்சார இயக்க தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் அருகே எல்லிங்கநாயக்கன்பட்டி கிராமத்தில் நடந்த விழாவில் குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் டி.நாராயணசாமி தலைமை வகித்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். நாகலட்சுமி அறக்கட்டளையின் நிர்வாகி,  பாவாலி ஊராட்சி தலைவர் கே.நாகராஜன், உதவி தொடக்க கல்வி அலுவலர்(ஓய்வு) கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், ஓய்வு பெற்ற ஆசிரியை விஜயா, ஆசிரியர் ராமராஜ் ஆகியோர் கல்வி விழிப்புணர்வு குறித்து கிராம மக்களிடையே விளக்கமாக எடுத்துரைத்தனர்.

அதைத் தொடர்ந்து கிராம பொதுமக்களிடையே தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பது தொடர்பாகவும், கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான துண்டு பிரசுரங்களையும் விநியோகம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலர்கள் மற்றும் நாகலட்சுமி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT