விருதுநகர் அருகே வீட்டுக் கதவை உடைத்து ரொக்கம் வெள்ளிப்பொருள்கள் திருட்டு
விருதுநகர் அருகே பூட்டியிருந்த வீட்டுக் கதவையின் பூட்டை உடைத்து வெள்ளிப்பொருள்கள் மற்றும் ரொக்கம் ரூ.25 ஆயிரத்தையும் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து
விருதுநகர் அருகே பூட்டியிருந்த வீட்டுக் கதவையின் பூட்டை உடைத்து வெள்ளிப்பொருள்கள் மற்றும் ரொக்கம் ரூ.25 ஆயிரத்தையும் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே பெரியகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ்குமார்(33). இவர் சனிக்கிழமை காலையில் குடும்பத்தோடு உறவினர் வீட்டுக்கு சென்றார்களாம். அதையடுத்து, இரவில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்க்கையில் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து உள்ளே சென்று பார்க்கையில் வீட்டில் வைத்திருந்த வெள்ளிக் குத்துவிளக்குகள் மற்றும் பீரோவை உடைத்து சில்லரைகளாக மாற்றி வைத்திருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கத்தையும் யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இது தொடபாக கணேஷ்குமார் விருதுநகர் பாண்டியன் நகர் காவல் நிலையத்தி்ல் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆள் இல்லாத நேரத்தில் வீட்டுக் கதவை உடைத்து வெள்ளிப்பொருள்கள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.