தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் 2 வயதுக்குள்பட்ட விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் முகாம்

விருதுநகர் மாவட்டத்தில் 2 வயதிற்குள்பட்ட விடுபட்ட  குழந்தைகளுக்கு எட்டு நோய்களுக்கான தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் 2 வயதிற்குள்பட்ட விடுபட்ட  குழந்தைகளுக்கு எட்டு நோய்களுக்கான தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் செவ்வாய்கிழமை  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

மத்திய சுகாதார துறையின் சார்பில் 2 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு முழுமையாக தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ஜன்னி, இளம்பிள்ளைவாதம், தட்டம்மை, மஞ்சள் காமலை, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் காசநோய் ஆகியவைகளை தடுப்பதற்காக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதில் கட்டுமான பணி நடைபெறும் இடங்கள், செங்கல் சூளைகளில் பணிபுரிகின்றவர்கள், நாடோடிகள், அகதிகள், தொழில் நிமித்தமாக அடிக்கடி இடத்தை மாற்றிக் கொள்கிறவர்கள் ஆகியோரின் குழந்தைகளுக்கு தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி முழுமையாக போடாதவர்கள் இருக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பான கணக்கெடுப்புகளை பெற்றோர்களிடம் வழங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான அட்டைகளில் தடுப்பூசி விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு வீடு வீடாக அந்தந்த பகுதி செவிலியர்கள் மற்றும்  அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இம்மாவட்டத்தில் மொத்தம் 58228 குழந்தைகள் உள்ளனர். அதில், 8 வகை தடுப்பூசி போடப்படாத குழந்தைகளுக்கு முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்திரதனுஷ் திட்டத்தில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கும் அங்கன்வாடி மையங்களில் தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து  இரண்டாம் கட்டமாக அந்தந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடிகள் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 3-ம் கட்டமாக கடந்த 8ம் தேதி முதல் 15-ம் தேதி வரையிலும், 4-ம் கட்டமாக ஜூலை 9-ம் தேதி முதல் 16ம் தேதி வரையிலும் விடுபட்ட குழந்தைகளுக்கு மேற்குறிப்பிட்ட இடங்களில் தடுப்பூசி வழங்கப்பட இருக்கிறது.

இந்த வகையான தடுப்பூசி பொது சுகாதாரத்துறை மூலம் வழங்கப்பட்டு அந்தந்த  ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இது வேறு எந்த தனியார் மருத்துவமனைகளிலும் கிடைக்காத தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது.  அதனால் இந்த வாய்ப்பை கர்ப்பிணி பெண்கள் மற்றும் 2 வயதுக்குள்பட்ட குழந்தைகள் அனைவரும் தடுப்பூசி போட்டு, மேற்குறிப்பிட்ட நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT