முகப்பு
தற்போதைய செய்திகள்

ரூ.1.2 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

புதுச்சேரியில் ரூ.1.2 கோடியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை முதல்வர் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:44 AM
பகிர்:

புதுச்சேரியில் ரூ.1.2 கோடியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை முதல்வர் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் கோட்டத்தின் மூலம், அரியாங்குப்பத்தில் உள்ள வீராம்பட்டினம் பிரதான சாலையை கடலூர் சாலையில் இருந்து வீராம்பட்டினம் கிராமம் வரை இரு வழி சாலையாக அகலப்படுத்தி அதன் இரு மருங்கிலும் உள்ள கால்வாயினை ரூ.1.02 கோடி ரூபாய் செலவில் சீர் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளை முதல்வர் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தார். பேரவைத் தலைவர் வ.சபாபதி பூமி பூஜை செய்து வைத்தார்.

இதேபோல் வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன்  கோயிலுக்கு எதிரிலுள்ள கடற்கரையில் கற்சாலைகளுக்கு ரூ.21.4 செலவில் தடுப்பு சுவர் அமைத்து தார் சாலை அமைக்கும் பணியினை முதல்வர் தொடங்கி வைத்தார்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள்  சுவாமிநாதன், சவுரிராஜன், லூசியன் பெட்ரோகுமார், துளசிங்கம் உட்பட ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட கோடாத்தூர் மணவெளி கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க பொதுப்பணித் துறை மூலம் ரூ.3.39 கோடி செலவில் ஒன்றரை லட்சம் லிட்டர்  கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி மற்றும் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த் தேக்க தொட்டி, குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கான பூமி பூஜையை துணை சபாநாயகர் டிபிஆர் செல்வம் துவக்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.