முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடியில் கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மீட்பு

தூத்துக்குடி அருகே வியாழக்கிழமை நடுக்கடலில் தத்தளித்த நாட்டுப்படகு மீனவர்கள் 6 பேரை கடலோர காவல்படையினர் மீட்கப்பட்டனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:47 AM
பகிர்:

தூத்துக்குடி அருகே வியாழக்கிழமை நடுக்கடலில் தத்தளித்த நாட்டுப்படகு மீனவர்கள் 6 பேரை கடலோர காவல்படையினர் மீட்கப்பட்டனர்.

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த பிச்சையாவாஸ் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில் அதே பகுதியைச் சேர்ந்த லிங்குசன் (37), மனோகரன் (57), அல்போன்ஸ் (59), அந்தோணி (52), அந்தோணிசாமி (27), வில்வர் (32) ஆகியோர்  கடந்த 15 ஆம் தேதி அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இந்நிலையில்,  தூத்துக்குடியில் இருந்து 28 கடல் மைல் தொலைவில் திடீரென என்ஜின் பழுதாகியது. இதுகுறித்து படகில் இருந்த மீனவர்கள் கடலோர காவல் படையினர், கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் மற்றும் சக மீனவர்களுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து,  கடலோர காவல் படைக்கு சொந்தமான ஆதேஷ் ரோந்துக் கப்பல் மூலம் நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்களும் வியாழக்கிழமை மீட்கப்பட்டனர். அவர்கள் சென்ற படகும் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், மீனவர்கள் 6 பேரும் கடலோ பாதுகாப்பு குழும போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.