ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அனுமதியின்றி செயல்பட்ட கிரானைட் குவாரியிலிருந்து வெடி பொருட்கள் பறிமுதல்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அனுமதியின்றி செயல்பட்ட கிரானைட் குவாரியிலிருந்து க்யூ பிரிவு போலீஸார் வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தி ஏராளமான வெடிபொருட்களை
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அனுமதியின்றி செயல்பட்ட கிரானைட் குவாரியிலிருந்து வெடி பொருட்கள் பறிமுதல்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அனுமதியின்றி செயல்பட்ட கிரானைட் குவாரியிலிருந்து க்யூ பிரிவு போலீஸார் வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தி ஏராளமான வெடிபொருட்களை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அனுமதியின்றி செயல்பட்ட கிரானைட் குவாரியிலிருந்து க்யூ பிரிவு போலீஸார் வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தி ஏராளமான வெடிபொருட்களை பறிமுதல் செய்து, குவாரி மேலாளரைக் கைது செய்தனர். மேலும் வெடிபொருட்களை கொண்டு வந்து பூமிக்கடியில் புதைத்து வைத்த வெடிபொருள் குடோன் உரிமையாளரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்ட க்யூ பிரிவு போலீஸாருக்கு குறிப்பிட்ட இடத்தில் அனுமதியின்றி கிரானைட் குவாரி செயல்பட்டு வருவதாயும், அங்கே ஏராளமான வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாயும் ரகசிய தகவல் வந்தது. இதன் பேரில் க்யூ பிரிவு ஆய்வாளர் சாந்தலட்சுமி, சார்பு ஆய்வாளர்கள் பாலகணேசன், அ.ராதா மற்றும் முதுநிலை காவலர் அ.பாலகணேசன் மற்றும் போலீஸார், மொட்டமலை இலங்கை அகதிகள் முகாமிற்கு மேற்கு பக்கம் உள்ள மதுரை கே.கே.நகர் செல்லையா மகன் சுந்தரபாண்டியன் என்பவருக்குச் சொந்தமான பிரித்வி கிரானைட்ஸ் குவாரியில் வியாழக்கிழமை மாலை அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு தருமபுரி மாவட்டம், பொன்னகரம் தாலுகா, நெருப்பூர், வெள்ளையன் மகன் சாமியண்ணன் (49) என்பவர் மேலாளராக இருந்தார்.அவரிடம் விசாரித்தபோது, குவாரியின் உள்ளே பூமிக்கு அடியில் குழிதோண்டி பதுக்கி வைத்திருந்த அலுமினியம் சூப்பர் பிளைன் டெட்டனேட்டர் 110, டெட்டனேட்டரிங் கார்டு 600 மீட்டர், ஜெலட்டின் 131, கரி்மருந்து திரி 60 மீட்டர் ஆகியவற்றை எடுத்துக் கொடுத்துள்ளார்.
சாமியண்ணனிடம் மேலும் போலீஸார் விசாரித்தபோது, குவாரிக்கு திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் உள்ள ஸ்ரீபாலன் எக்ஸ்ப்ளோசிவ் குடோனில் இருந்து அதன் உரிமையாளர் ராமசாமி என்பவர் கொண்டுவந்து குவாரியில் குறிப்பிட்ட வெடிபொருட்களை வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறினார்.
ஆபத்தையும், சேதாரத்தையும் விளைவிக்கக்கூடிய வெடிபொருட்களை முறையான அனுமதியின்றியும், பாதுகாப்பின்றியும் வைத்துவிட்டுச் சென்ற வெடிபொருள் குடோன் உரிமையாளர் ராமசாமி, மற்றும் வெடிபொருட்களை வைத்திருந்த குவாரி மேலாளர் சாமியண்ணன் ஆகியோர் மீது வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் மேலாளர் சாமியண்ணன் கைது செய்யப்பட்டார். தலைமறைவக உள்ள ராமசாமியை போலீஸார் தேடி வருகிறார்கள்.