முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் ஸ்ரீநடராஜப்பெருமானுக்கு ரூ 3.5 லட்சம் மதிப்பிலான பதக்கம்! ஆந்திர மாநில பக்தர் வழங்கினார்k

சிதம்பரம் ஸ்ரீநடராஜபெருமானுக்கு, ரூ.3.50 லட்சம் மதிப்பிலான சுமார் 135 கிராம் தங்கத்தில் மாணிக்க கல், வெள்ளை கற்கள் பதிக்கப்பட்ட சங்கிலியில் அணிவிக்கக்கூடிய பதக்கத்தை ஆந்திர

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜபெருமானுக்கு, ரூ.3.50 லட்சம் மதிப்பிலான சுமார் 135 கிராம் தங்கத்தில் மாணிக்க கல், வெள்ளை கற்கள் பதிக்கப்பட்ட சங்கிலியில் அணிவிக்கக்கூடிய பதக்கத்தை ஆந்திர பக்தர் வழங்கியுள்ளார்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீ நடராஜப்பெருமானுக்கு 48 நாட்களாக நடைபெற்ற மண்டலாபிஷேகம் சனிக்கிழமை பூர்த்தியடைந்தது. அன்றைய தினம் ரூ.3.50 லட்சம் மதிப்பிலான 135 கிராம் தங்கத்தில் நடுவில் ஒற்றை மாணிக்க கல்லும், பதக்கத்தை சுற்றி வெள்ளைக் கற்கள் பதித்த சங்கிலியுடன் கூடிய ஜாங்கிரி பதக்கம் ஒன்றை ஆந்திரா மாநிலம் ஹைதராபாத் நகரைச்சேர்ந்த ஸ்ரீதர், பத்மரஞ்சனி ஆகியோர் கட்டளை தீட்சிதர் ரெ.ச.ராஜாமணி தீட்சிதர் மூலமாக நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர்  ஐ.சர்வேஸ்வர தீட்சிதரிடம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியின் போது ரா.பாஸ்கர தீட்சிதர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பக்தர் வழங்கிய தங்க பதக்கம் ஸ்ரீ நடராஜப்பெருமானுக்கு அன்றைய தினமே சாற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.