விருதுநகர் அருகே அனுமதியின்றி தயாரித்த கருந்திரிகள் பறிமுதல்: ஒருவர் கைது
விருதுநகர் அருகே அனுமதியின்றி வீட்டில் தயார் செய்த கருந்திரி கட்டுக்களை போலீஸார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
விருதுநகர் அருகே அனுமதியின்றி வீட்டில் தயார் செய்த கருந்திரி கட்டுக்களை போலீஸார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
விருதுநகர் அருகே சங்கரலிங்காபுரம் கிராமத்தில் அனுமதியில்லாமல் வீடுகளில் கருந்திரி கட்டுக்களை தயார் செய்வதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில் ஆமத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் போலீஸார் திங்கள்கிழமை காலையில் திடீர் ரெய்டில் ஈடுபட்டனர். அதில், சண்முகம் என்பவர் வீட்டில் சோதனையிட்டபோது அங்கு தயார் செய்து வைத்திருந்த 15 கருந்திரி கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சண்முகம் மீது ஆமத்தூர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
Advertisement