முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒரே நாளில் 15 அடி உயர்ந்தது: சேர்வலாறு அணை 100 அடியை தாண்டியது

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சேர்வலாறு அணையின் நீர்மட்டம ஒரே நாளில் 15 அடி உயர்ந்து 100 அடியை தாண்டியது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்து 81 அடியாக உள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:51 AM
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சேர்வலாறு அணையின் நீர்மட்டம ஒரே நாளில் 15 அடி உயர்ந்து 100 அடியை தாண்டியது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்து 81 அடியாக உள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில்  பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை-43, பாபநாசம் கீழ் அணை-4, சேர்வலாறு அணை-8, மணிமுத்தாறு அணை-4.2, கடனாநதி அணை-7, ராமநதி அணை-7, கருப்பாநதி அணை-5, குண்டாறு அணை-21, அடவிநயினார் அணை-18, செங்கோட்டை-14, ஆய்க்குடி-6.2, ராதாபுரம்-2, அம்பாசமுத்திரம்-5, சேரன்மகாதேவி-4.2, களக்காடு-3.2, கன்னடியன் அணைக்கட்டு-5. நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 6,413.54 கனஅடியும், சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 3,500 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 770 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 215 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 109 கனஅடியும், கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 43 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 71 கனஅடியும், வடக்குப் பச்சையாறு அணைக்கு விநாடிக்கு 26 கனஅடியும், கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 105 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

100 அடியை தாண்டியது: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்து 81 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 15 அடி உயர்ந்து 100.20 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 85.85 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம்  3 அடி உயர்ந்து 60 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 4.50 அடி உயர்ந்து 57 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 65.62 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 19.68 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 77 அடியாகவும், வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 29.25 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.56 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 50.50 அடியாகவும் இருந்தது.

விவசாயிகள் மகிழ்ச்சி: 52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியது. நிகழ் தென்மேற்கு பருவத்தில் கொடுமுடியாறு அணை நிரம்பும் முதல் அணையாகும். நீர்பிடிப்பு பகுதியில் நீடித்து வரும் மழையால் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருவது குறித்து விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →