முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை பிஇ கவுன்சிலிங்: 993 மாணவ, மாணவியர்கள் ஆணை பெற்றனர்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஇ படிப்பிற்கான கலந்தாய்வு சனிக்கிழமை காலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் நாளும் நடைபெற்றது. இருநாட்கள் நடைபெற்ற

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:51 AM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஇ படிப்பிற்கான கலந்தாய்வு சனிக்கிழமை காலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் நாளும் நடைபெற்றது. இருநாட்கள் நடைபெற்ற கலந்தாய்வில் 2130 இடங்களுக்கு பேர் 993 மாணவ, மாணவியர்கள் மட்டுமே பங்கேற்று அனுமதி சேர்க்கை ஆணை பெற்றனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2015-16 ஆண்டிற்கான பிஇ படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் கடந்த மே.6-ம் தேதி முதல் வழங்கப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன்.12-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. பிஇ படிப்பில் சேர 2431 விண்ணப்பங்கள் விற்பனையாகின. இதில் 2201 மாணவ, மாணவியர்கள் விண்ணப்பித்திருந்தனர். கலந்தாய்வில் தகுதியுள்ள 1965 பேர் பங்கேற்க அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.

விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான கவுன்சிலிங் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் சனிக்கிழமை (ஜூன் 27) காலை தொடங்கியது. முதல் நாள் கவுன்சிலிங்கில் பங்கேற்க 1102 மாணவ, மாணவியர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பப்பட்டது. 482 மாணவ, மாணவியர்கள் பங்கேற்று அவர்களது விருப்பப்பாடப்பிரிவில் அனுமதி சேர்க்கை பெற்றனர். 2-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கவுன்சிலிங்கில் பங்கேற்க 863 பேருக்கு பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. இதில் 511 மாணவ, மாணவியர் பங்கேற்று தங்களது விருப்பப் பாடப்பிரிவில் அனுமதி சேர்க்கை ஆணை பெற்றனர்.

பிஇ படிப்பில் 1137 இடங்கள் காலி: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 27,28 தேதிகளில் இருநாட்கள் நடைபெற்ற கலந்தாய்வில் 2130 இடங்களுக்கு 993 மாணவ, மாணவியர்கள் அனுமதி சேர்க்கை ஆணை பெற்றுள்ளனர். மீதம் 1137 இடங்கள் காலியாக உள்ளது. காலியான இடங்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.