முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் நடைபயற்சி சென்ற பட்டதாரி பெண் சாவு: மற்றொரு பெண் படுகாயம்

சிதம்பரம் நகரில் சாலையோரம் நடைபயிற்சி சென்ற கொண்டிருந்த பெண்கள் மீது லாரி மோதியதில் பட்டதாரி பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு பெண் படுகாயம் அடைந்து மருத்துவக்கலவ்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:51 AM
பகிர்:

சிதம்பரம் நகரில் சாலையோரம் நடைபயிற்சி சென்ற கொண்டிருந்த பெண்கள் மீது லாரி மோதியதில் பட்டதாரி பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு பெண் படுகாயம் அடைந்து மருத்துவக்கலவ்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மணலூர் லால்புரத்தில் டிஎன்சிஎஸ்சி குடோன் சாலையில் வசிப்பவர் இளங்கோவன் மகள் சரோஜினி (22). தந்தை இறந்துவிட்டதால் சரோஜினி தாயாருடன் வசித்து வருகிறார். பி.டெக் படித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சரோஜினி வழக்கம் போல எதிர்வீட்டில் வசிக்கும் துரைராஜ் மனைவி மலர்விழி (40) என்பவருடன்
நடைபயிற்சிக்காக வெளியே சென்றார்.

சிதம்பரம் வடக்குமெயின் ரோட்டில் உள்ள திருமண மண்டபம் அருகே சாலையோரம் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் தூக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று பின்புறமாக வந்து அவர்கள் மீது மோதியது. இதில் சரோஜினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மலர்விழி படுகாயம் அடைந்து சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து நடைபெற்ற லாரி ஓட்டுநர் தப்பிஓடிவிட்டார்.

Advertisement

இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments