பழனி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அதிமுக சார்பில் ரொட்டி, பழங்கள் வழங்கப்பட்டது
பழனி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அதிமுக சார்பில் சுமார் இருநூறு நோயாளிகளுக்கு ரொட்டி, பழங்கள், பிஸ்கெட் ஆகியன வழங்கப்பட்டது.
பழனி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அதிமுக சார்பில் சுமார் இருநூறு நோயாளிகளுக்கு ரொட்டி, பழங்கள், பிஸ்கெட் ஆகியன வழங்கப்பட்டது.
முன்னாள் நகரசெயலாளரும், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவருமான ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பழனி எம்எல்ஏ., வேணுகோபாலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நோயாளிகளுக்கு உணவுப்பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கினார். தொடர்ந்து திருக்கோயில் கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர், குழந்தைகளுக்கும், தவில், நாதஸ்வர பள்ளி மாணவர்கள் சுமார் நூற்றைம்பது பேருக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஒன்றியகுழு தலைவர் செல்லசாமி, நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், மாவட்ட மாணவரணி செயலாளர் அன்வர்தீன், அம்மா பேரவை துணை செயலாளர் ராஜாமுகமது உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.