விருதுநகர் அருகே தனியார் பள்ளி ஆசிரியை மாயமானதாக சகோதரர் செவ்வாய்கிழமை சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
விருதுநகர் அருகே அல்லம்பட்டி காந்திநகரைச் சேர்ந்த துரைப்பாண்டியின் மகள் ரம்யா(23). இவர் செவல்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு வேலைக்கு புறப்பட்டுச் சென்றாராம். ஆனால், மாலையில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம்.
இதனால் பெற்றோர்கள் மற்றும் சகோதரர் ஆகியோர் கவலை அடைந்தனர். பின்னர் உறவினர் மற்றும் தோழி ஆகியோரின் வீடுகளில் விசாரித்தனர். அதில் எங்கிருக்கிறார் என்கிற தகவல் கிடைக்கவில்லையாம்.
இது குறித்து சூலக்கரை காவல் நிலையத்தில் சகோதரர் ராம்ராஜ் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து காணமல் போன தனியார் பள்ளி ஆசிரியை தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.