விருதுநகர் அருகே வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக கணவர் குடும்பத்தினர் மீது மனைவி புகார் செய்ததன் பேரி்ல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் சுமதி(35). இவருக்கும் அருப்புக்கோட்டை-திருச்சுழி சாலையில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கருணாகரனுக்கும் கடந்த 12.3.2001 அன்றைய நாளில் திருமணம் நடைபெற்றதாம். அப்போது, 15 சவரன் நகை மற்றும் ரூ.1 லட்சத்திற்கான சீர்வரிசை பொருள்கள் கொடுத்துள்ளனர். தற்போது, இவர்கள் லட்சுமி நகரில் குழ்நதைகளுடன் குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில், கருணாகரனுக்கும், இதே பகுதியைச் சேர்ந்த முத்துமாரி என்பவருக்கும் இடையே தொடர்பு இருந்துள்ளது. அதன் மூலம் பெண் குழந்தை இருப்பதையும் மறைத்து திருமணம் செய்துள்ளார். இது குறித்து கருணாகரனிடம் கேட்டதற்கு, அவரது தாயார் கமலம் என் மகனுடன் வாழ வேண்டும் என்றால் மீண்டும் நகை பணம் கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் உடனே வெளியேறு எனக் கூறி மாமியார் உள்ளிட்ட உறவினர்கள் சுமதியை கையால் தாக்கியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுமதி புகார் செய்தார். அதன் அடிப்படையில் கணவர் கருணாகரன், மாமனார் ஜெயபால்சிங், மாமியார் கமலம், உறவினரான வந்தனா மற்றும் முத்துமாரி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.