முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே மூடியிருந்த ரயில்வே கேட்டில் மோதி இருவர் சாவு: 5 பேர் காயம்

இதனால் அப்பகுதியில் சுமார் 20 நிமிடங்கள்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கேட்டில் ஏற்பட்ட விபத்தில்சிக்னல் கிடைக்காததால்,

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:52 AM
பகிர்:

சிதம்பரம் அருகே கடலூர் செல்லும் சாலையில் ஆலப்பாக்கம் ரயில்வே கேட்டில் மோட்டார் சைக்கிள் மோதியதில், அதில் வந்த இரு இளைஞர்கள் இறந்தனர். 5 பேர் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டு அருகே உள்ள ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த தினேஷ்பாபு (30). இவரது சகோதரர் ரமேஷ்பாபு (32). இருவரும் மோட்டார் சைக்கிளில் புதன்கிழமை இரவு கடலூரிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்துள்ளார். அப்போது ரயில் வருகைக்காக ஆலப்பாக்கம் ரயில்வே கேட் மூடிக்கொண்டிருந்தனர். இதனை பார்க்காமல் மோட்டார் சைக்கிளிள் உள்ள புகுந்து எதிர்புறம் உள்ள ரயில்வேகேட் மீது மோதி, அங்கு கேட் அருகே நின்றிருந்தவர்கள் மீதும் மோதி கீழே விழுந்தனர்.

இவ்விபத்தில் தினேஷ்பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரமேஷ்பாபு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறந்தார். மேலும் இவ்விபத்தில் ரயில்வேகேட் அருகே நின்று கொண்டிருந்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சுகுமார் (65), விக்ரமன் (29), கீழ்அனுவம்பட்டைச் சேர்ந்த ராசாத்தி (48), சுமதி (30), அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க 5 பேர் படுகாயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கேட்டில் ஏற்பட்ட விபத்தில் சிக்னல் கிடைக்காததால், அவ்வழியே வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் 30 நிமிடங்கள் நின்று தாமதமாக புறப்பட்டு சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.