விராலிமலையில் பரபரப்பு பொதுமக்கள் உதவியுடன் கொள்ளையர்களை விரட்டி பிடித்த போலீஸார்
விராலிமலை அருகே தனியார் நகை கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர்களை காரில் துரத்திச்சென்று, பொதுமக்கள் உதவியுடன் போலீஸார் கொள்ளையர்களை பிடித்தனர், சினிமா பாணியில் சனிக்கிழமை அதிகாலை நடைபெற்ற இச்சம்பவம் விராலிமலையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள கொடும்பாளூரில் மீனவேலியைச் சேர்ந்த சத்தியம் என்பவர் நகை அடகுகடை வைத்து நடத்தி வருகிறார், வழக்கம் போல் வெள்ளிக்கிழமை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார், இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அலாரம் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வெளியே வந்து பார்த்ததில் கடையின் பூட்டை 5 பேர் கொண்ட குழுவினர் உடைத்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் கொள்ளையர்களை பிடிக்க முற்பட்டபோது சுதாரித்து கொண்ட கொள்ளையர்கள் தங்கள் வந்த சொகுசு காரில் (ஸ்கார்ப்பியோ) ஏறி தப்பியுள்ளனர், உடனடியாக பொதுமக்கள் விராலிமலை போலீஸாருக்கு தகவல் கொடுத்து விட்டு, கொள்ளையர்களை பின்தொடர்ந்து வந்துள்ளனர்,
பின்னர் விராலிமலையில் வழிமறித்த பொதுமக்கள், போலீஸாரிடம் காரை நிறுத்தாமல் தப்பியுள்ளனர், பின்தொடர்ந்து போலீஸாரும் செல்ல விராலிமலை திருச்சி சாலை சுங்கவரி சோதனைச்சாவடி அருகே வந்த போது கொள்ளையர்களின் கார் டயர் வெடித்ததை தொடர்ந்து வண்டியை நிறுத்திவிட்டு காட்டுப்பகுதியில் இறங்கி ஓடியுள்ளனர் பின்னால் தொடர்ந்த போலீஸார் ஒரு வழியாக கொள்ளையர்களை மடக்கி பிடித்து இலுப்பூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்