மோடி தான் இந்தியாவை பலம் வாய்ந்ததாக கருதும் சூழலை ஏற்படுத்தினார்: பா.ஜ.க. பொதுச்செயலர் சாமிநாதன்
இந்தியாவை பிற நாடுகள் பலம் வாய்ந்ததாக கருதும் சூழலை பிரதமர் மோடி தான் ஏற்படுத்தி உள்ளார் என புதுச்சேரி மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளர் ஆர்வி.சாமிநாதன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவை பிற நாடுகள் பலம் வாய்ந்ததாக கருதும் சூழலை பிரதமர் மோடி தான் ஏற்படுத்தி உள்ளார் என புதுச்சேரி மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளர் ஆர்வி.சாமிநாதன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:
கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களும், தமிழக மீனவர்களும் கொல்லப்பட்ட போது வேடிக்கை பார்த்தனர். அப்போது மெüனமாக இருந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி, தற்போது மோடி ஆட்சியில் சிறிய நாடான இலங்கை கூட இந்தியாவை மிரட்டுவதாக கூறியுள்ளார்.
இதை ஏற்க முடியாது. மன்மோகன் சிங் ஆட்சியின் போது இந்நிலை இருந்தது. ஆனால் அமெரிக்காவே நமது நாட்டை பலம் மிக்கதாக கருதும் சூழலை மோடி ஏற்படுத்தி உள்ளார். 60 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் தவறான வெளியுறவு கொள்கையால் இந்திய-இலங்கை உறவு சீர்குலைந்தது. சீனா-பாகிஸ்தான் நாட்டின் ராணுவ மையமாக இருந்தது.
இலங்கை தமிழர்கள், தமிழக மீனவர்களுக்கு காங்கிரஸ் அரசு செய்த துரோகம் வரலாற்றில் மன்னிக்க முடியாது. ஆனால் மோடி பதவியேற்றது முதல் அண்டை நாடுகளுடன் பல்வேறு பிரச்னைகளை ராஜதந்திர முறையில் கையாள்கிறார்.
அதே போல் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் போது உடனே விடுதலை செய்யப்படுகின்றனர். இலங்கை அரசால் தூக்குதண்டனை விதிக்கப்பட்டோரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்திய-இலங்கை நல்லுறவு மேம்படுத்தும் வகையில் மோடி பயணம் மேற்கொள்வதை கெடுக்கும் வகையில் நாராயணசாமி பேசி உள்ளது கண்டிக்கத்தக்கது. மோடியின் பயணம் குறித்துப் பேச அவருக்கு எந்த உரிமையும் இல்லை. இலங்கையில் பெரும்பாலான தமிழர்களின் ஆதரவுடன் புதிய அரசு பதவி ஏற்றுள்ளது. அங்குள்ளோருக்கு நன்மைகள் கிடைக்கவே மோடி பயணம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் அவரது பயணத்தை கெடுக்கும் வகையில் நாராயணசாமி பேசுவது தமிழர் பிரச்னையில் அவருக்கு அக்கறை இல்லாததையே காட்டுகிறது என்றார் சாமிநாதன்.