புதுச்சேரி நகராட்சி செயல்பாட்டைக் கண்டித்து முழு கடையடைப்பு போராட்டம்: வர்த்தகம் கடும் பாதிப்பு
புதுச்சேரி நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாட்டைக் கண்டித்து, அனைத்து வியாபாரிகள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் முழுமையாக வர்த்தகம் கடும் பாதிப்படைந்தது..
புதுச்சேரி நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாட்டைக் கண்டித்து, அனைத்து வியாபாரிகள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் முழுமையாக வர்த்தகம் கடும் பாதிப்படைந்தது..
புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கம்பன் கலையரங்கம், புஸ்சி வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ணன் எம்.பி. மற்றும் ஆதரவாளர்கள் நகராட்சி அதிகாரிகளிடம் தட்டிக் கேட்டனர். அவர்களையும் பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கண்ணன் எம்.பி. தரப்பைக் கண்டித்து திங்கள்கிழமை நகராட்சி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். மேலும் அவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவலியுறுத்தினர். இதையடுத்து அவர் மீது ஒதியஞ்சாலை போலீஸôர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடைபாதைக் கடைகள், ஆக்கிரமிப்புகளை முன்னறிவிப்பின்றி அகற்றிய நகராட்சியின் செயல்பாட்டைக் கண்டித்தும் கண்ணன் எம்.பி. ஆதரவு அமைப்பான அனைத்து வியாபாரிகள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கடைகளை திறக்க பாதுகாப்பு வேண்டும் என சீனியர் எஸ்.பி. கவாசிடம் கோரிக்கை மனு அளிóத்திருந்தனர்.
முழு கடையடைப்பு
இந்நிலையில் புதுவையின் முக்கிய வர்த்தக பகுதிகளான நேரு வீதி, காந்தி சாலை, அண்ணா சாலை, புஸ்சி வீதி, முதலியார்பேட்டை, 100 அடி சாலை , கடலூர் சாலை, , பஸ் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் கடைகளை முழுமையாக மூடப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் பொருள்களை வாங்க முடியாமல் அவதிப்பட்டனர். கடையடைப்பால் வெளியூரில் இருந்து பொருள்கள் வாங்க வந்தவர்களும் பாதிக்கப்பட்டனர். மருந்துக் கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
அசம்பாவித சம்பவங்கள் நேராமல் தடுக்க 500-க்கு மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். டெம்போக்கள், பஸ்கள் கூட்டமின்றி இயக்கப்பட்டன. பள்ளி, கல்லூரி பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. தேர்வுகளும் வழக்கம் போல் நடைபெற்றன.