தற்போதைய செய்திகள்

வாஜ்பாய்க்கு பாரத ரத்னா: சென்னையில் பாஜகவினர் கொண்டாட்டம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதை சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியினர் வெள்ளிக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

சரவணன்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதை சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியினர் வெள்ளிக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

முன்னாள் பிரதமரும், பாஜக முக்கியத் தலைவர்களில் ஒருவருமான வாஜ்பாய்க்கு வெள்ளிக்கிழமை பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அதனை முன்னிட்டு சென்னைû தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மூத்த தலைவர் இல. கணேசன், மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் எஸ். மோகன்ராஜூலு உள்ளிட்டோர் நிóர்வாகிகள், தொண்டர்களுடன் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அப்போது பேசிய தமிழிசை, வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கியிருப்பது இந்த நாட்டுக்கு மகிழ்ச்சியான நாள். பாஜகவுக்கு பெருமை அளிக்கும் நாள். தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு வித்திட்டவர் வாஜ்பாய். இத்திட்டம் நிறைவேறியிருந்தால் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகள் இல்லாமல் போயிருக்கும் என்றார்.

இல. கணேசன் பேசும்போது, தங்களால் மட்டுமே நிலையான ஆட்சியைத் தர முடியும் என காங்கிரஸ் இருமாப்புடன் இருந்த வேளையில் 23 கட்சிகளை இணைத்து நிலையான ஆட்சியை வழங்கியவர் வாஜ்பாய். அமெரிக்காவுக்கு தெரியாமல் அணுகுண்டு சோதனை நடத்திக் காட்டியவர். தங்க நாற்கரச் சாலைகள் திட்டம் அவரது தொலைநோக்குப் பார்வைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட  தலைவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ள பாஜகவுக்கு பெருமை அளிக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT