முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் ஸ்ரீகோதண்டராமர் கோயில் தேரோட்டம்

சிதம்பரம் மேலரதவீதியில் உள்ள ஸ்ரீகோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் சனிக்கிழமை மற்றும் சீதாகல்யாணம் நிகழ்ச்சி சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:02 AM
பகிர்:

சிதம்பரம் மேலரதவீதியில் உள்ள ஸ்ரீகோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் சனிக்கிழமை மற்றும் சீதாகல்யாணம் நிகழ்ச்சி சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது.

சிதம்பரம் மேலரதவீதியில் உள்ள ஸ்ரீகோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவம் கடந்த மார்ச் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  மார்ச் 28-ம் தேதி சனிக்கிழமை அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீகோதண்டராமர் தேரில் எழுந்தருளிய பின்னர் தேரோட்டம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு மேலவீதி ஸ்ரீகோதண்டராமர் கோயில் வளாகத்திலிருந்து தேர் புறப்பட்டு, நான்குவீதிகள் வலம் வந்தது. தேரினை திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர்.  பின்னர் கோயில் வளாகத்தில் திருமஞ்சனம், சீதா கல்யாணம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மார்ச் 29-ம் தேதி காலை புஷ்பயாகம், மாலை ஸ்ரீஆஞ்சநேயர் உத்சவம், பட்டாபிஷேகம், இரவு புஷ்ப பல்லக்கு, 31-ம் தேதி விடையாத்தி திருமஞ்சனத்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டிகள் டி.திருவேங்கடவன், வி.எஸ்.கிருஷ்ணமாச்சாரி, ஜே.சுதர்சனன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments