சிதம்பரம் அருதே தனியார் மின்உற்பத்தி நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பலகோடி ரூபாய் பொருள்கள் நாசம்
சிதம்பரம் அருகே கரிக்குப்பத்தில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட தீடீர் தீவிபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமுற்றன.
சிதம்பரம் அருகே கரிக்குப்பத்தில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட தீடீர் தீவிபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமுற்றன.
சிதம்பரம் அருகே கரிக்குப்பத்தில் ஐஎல்எஃப்எஸ் பவர் கம்பெணி என்ற தனியார் மின்உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மின் உற்பத்தி நிலையத்திற்கான கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சனிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு மின்உற்பத்தி நிலையத்தில் உள்ள கூலிங் டவரில் தெர்மோகூல் பொருத்தி வெல்டிங் செய்யும் பணி நடைபெற்று வந்தது. அப்போது திடீரென தீப்பிடித்து மள, மளவென தீ பரவியதால், வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியேறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இத்தீவிபத்தில் சுமார் ரூ 5 கோடிக்கு மேலான பொருள்கள் எரிந்து சேதமுற்றிருக்கும் என அஞ்சப்படுகிறது.