சாகுபடி செய்த கரும்பை கொள்முதல் செய்ய மறுப்பு: நெல்லை மாவட்ட விவசாயிகள் பாதிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் சாகுபடி செய்த கரும்பை தனியார் நிறுவனம் கொள்முதல் செய்யாததால் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சாகுபடி செய்த கரும்பை தனியார் நிறுவனம் கொள்முதல் செய்யாததால் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மானூர் பகுதி விவசாயிகள் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: அம்பாசமுத்திரம் அருகே இடைகாலில் நிறுவப்பட்ட தனியார் கரும்பு ஆலை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்யும் வகையில் வேளாண்துறை உதவியுடன் வங்கிகளில் விவசாயக் கடன் பெற்று வழங்கப்பட்டது.
இம்மாவட்டத்தில் மானூர் பகுதியில் உள்ள 100 க்கும் மேற்பட்டோர் விவசாயிகளுக்கு அங்குள்ள வங்கிகளில் கடந்த 2009 இல் கரும்பு சாகுபடி செய்யும் வகையில் ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமாக கடன் வழங்கப்பட்டது. பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளை தேசிய வேளாண் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். அதற்கான பிரிமியம் தொகையும் வசூலிக்கப்பட்டது.விவசாயிகள் சொட்டு நீர்பாசனம் மூலம் விவசாயிகளும் கரும்பு சாகுபடி செய்தனர்.சாகுபடி செய்யப்பட்ட கரும்பை தனியார் கரும்பு ஆலை கொள்முதல் செய்யாமல் இழுத்தடித்தனர். சாகுபடி செய்த கரும்பினை வெட்டுவதில் தாமதம் ஏற்பட்டதால் அவைகள் சேதமடைந்தன.
இந்நிலையில் தனியார் கரும்பு ஆலை மூடப்பட்டதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. சாகுபடி செய்த கரும்புக்கான விலையும் கிடைக்கவில்லை. வங்கி கடன் பெற்றபோது, விவசாயிகளிடம் பிடித்தம் செய்யப்பட்ட காப்பீடு பிரிமியத் தொகையினை வங்கிகளில் செலுத்தவில்லை.
தற்போது கடன் வழங்கிய வங்கிகள் கடனை திருப்பி செலுத்துமாறு விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வங்கிகளில் தங்கநகைக் கடன்பேரில் பெறப்பட்ட கடன் தொகையினை திருப்பி செலுத்திய போதிலும் விவசாயிகளுக்கு தங்கநகையினை திருப்பி வழங்க வங்கிகள் மறுத்து வருகிறது.
தனியார் கரும்பு ஆலை, வங்கியும் ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டது. விவசாயிகள் சாகுபடி செய்த கரும்பை கொள்முதல் செய்யாமலும், கொள்முதல் செய்த கரும்புக்கு பணம் வழங்காத தனியார் கரும்பு ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடு்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.