பிஎஸ்என்எல் லேண்ட்லைன் சந்தாதாரர்களுக்கு சிறப்பு சலுகை: இன்று முதல் அமல்
பிஎஸ்என்எல் லேண்ட்லைன் சந்தாதாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட சிறப்புச் சலுகை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
பிஎஸ்என்எல் லேண்ட்லைன் சந்தாதாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட சிறப்புச் சலுகை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி பிஎஸ்என்எல் பொதுமேலாளர் லீலாவதி வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள சந்தாதாரர்களுக்கு பல்வேறு சலுகைகளை பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது. மே 1-ம் தேதி முதல் பிஎஸ்என்எல் லேண்ட் லைனில் இருந்து இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இந்தியா முழுவதும் அனைத்து நெட்வொர்க்கிலும் உள்ள லேண்ட்லைன் மற்றும் மொபைல் இணைப்புகளுக்கு இலவசமாக கால்களைப் பேசும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மையான பிஎஸ்என்எல் லேண்ட்லைன் ஜெனரல் பிளான்களுக்கும், ஸ்பெஷசல் பிளான்களுக்கும் குறிப்பிட்ட பிராட்பேண்ட் கோம்போ பிளான்களுக்கும் இச்சலுகை பொருந்தும். மேலும் இந்த பிளான்களில் தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கும் புதிய இணைப்பு பெறுவோருக்கும் இச்சலுகை பொருந்தும்.
அருகில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்களில் இதுகுறித்த விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
இதுவரை எந்த நிறுவனமும் வழங்காத மிகச்சிறந்த சலுகையைப்பெற பிஎஸ்என்எல் லேண்ட்லைன் வாடிக்கையாளராகலாம் என்றார் லீலாவதி.