முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடியில் கோயில் கருவறைக்குள் பூசாரி தூக்கிட்டுத் தற்கொலை

தூத்துக்குடியில் கோவில் கருவறைக்குள் ஞாயிற்றுக்கிழமை காலை பூசாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:18 AM
பகிர்:

தூத்துக்குடியில் கோவில் கருவறைக்குள் ஞாயிற்றுக்கிழமை காலை பூசாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி அரசு அலுவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (65). இவர் தூத்துக்குடி  எட்டையபுரம் பிரதான சாலையில் உள்ள இசக்கியம்மன் கோயிலில் பூசாரியாக இருந்து வந்தார்.  இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை கோயில் கருவறைக்குள் அம்மனுக்கு பக்தர்கள் சாத்திய பட்டு சேலையால் கணேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் கணேசனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.குடும்ப பிரச்னை காரணமாக கணேசன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.