தூத்துக்குடி பேருந்தில் 24 பவுன் நகைகளை தவறவிட்ட தம்பதி
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை பேருந்தில் 24 பவுன் நகைகளை தவறவிட்ட தம்பதி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை பேருந்தில் 24 பவுன் நகைகளை தவறவிட்ட தம்பதி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள சக்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் யோகன்பாபு (38). இவரது மனைவி ஆனந்தி (29). இந்த தம்பதிக்கு ஒரு கைக்குழந்தை உள்ளது. கோவையில் மளிகை கடை நடத்தி வரும் யோகன்பாபு கோவில் விழாவில் கலந்து கொள்வதற்காக குடும்பத்தினருடன் புதன்கிழமை தூத்துக்குடி வந்தார்.தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை காலை வந்து இறங்கிய அவர்கள், பின்னர் சக்கம்மாள்புரத்திற்கு செல்வதற்காக ஸ்ரீவைகுண்டம் செல்லும் பேருந்தில் ஏறினராம். அப்போது, அவர்கள் கொண்டு வந்த பெட்டி மற்றும் உடமைகளை பேருந்தில் வைத்துவிட்டு டீ குடிப்பதற்காக கீழே இறங்கியுள்ளனர்.
சிறிது நேரம் கழித்து அவர்கள் சென்று பார்த்தபோது அவர்களது பெட்டியை மட்டும் காணவில்லை. அதில் ஏறத்தாழ ரூ. 4 லட்சம் மதிப்பிளான 24 பவுன் நகைகள் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த யோகன்பாவும் அவரது மனைவியும் பேருந்து முழுவதும் தேடிப்பார்த்தபோதிலும் பெட்டி கிடைக்கவில்லை.இதையடுத்து மத்திய பாகம் காவல் நிலையத்தில் யோகன்பாபு புகார் செய்தார். போலீஸôர் வழக்குப் பதிவு செய்து பெட்டியை எடுத்துச் சென்ற நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.