தற்போதைய செய்திகள்

உருது : ஆம்பூர் பள்ளி மாணவி மாநிலத்தில் 2-ம் இடம்

பிளஸ்டூ அரசு தேர்வில் உருது பாடத்தில் ஆம்பூர் பள்ளி மாணவரி மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார்.

எம். அருண்குமார்

பிளஸ்டூ அரசு தேர்வில் உருது பாடத்தில் ஆம்பூர் பள்ளி மாணவரி மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார்.

ஆம்பூர் அஸ்னாத்-இ-ஜாரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிர ராபியா பாத்திமா (படம்) உருது பாடத்தில் 197 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார்.  இவர் பாடவாரியாக பெற்றுள்ள மதிப்பெண்கள் உருது 197, ஆங்கிலம் 186, கணிதம் 187, இயற்பியல் 153, வேதியியல் 160, கணினி அறிவியல் 195. 

இவருடைய தந்தை பஷீர் அஹமத் தனியார் ஷூ கம்பெனியில் கணக்காளராக பணிபுரிகிறார்.  இவர் கணினி பொறியாளராக விரும்புவதாக தெரிவித்தார். 

மாநில அளவில் 2-ம் இடம் பிடித்த மாணவி ராபியா பாத்திமாவை பள்ளித் தாளாளர் முஹம்மத் சயீத், முஸ்லீம் கல்விச் சங்க நிர்வாகி பிர்தோஸ் கே. அஹமத், நிர்வாக அலுவலர் அப்துல் ரஷீத், தலைமை ஆசிரியை முதாஹிரா பேகம், உருது ஆசிரியை ரைஸ் பானு ஆகியோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT