தற்போதைய செய்திகள்

விருதுநகரில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை மிரட்டும் உயர் அதிகாரிகள் மற்றும் அரசையும் கண்டித்து தொழிலாளர் முன்னேற்ற பேரவையினர் செவ்வாய்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எஸ். பாண்டியன்

அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை மிரட்டும் உயர் அதிகாரிகள் மற்றும் அரசையும் கண்டித்து தொழிலாளர் முன்னேற்ற பேரவையினர் செவ்வாய்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு  இச்சங்கத்தின் தலைவர் மாடசாமி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் பால்பாண்டியன், திமுக நகர செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.தனபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரை மிரட்டும் உயர் அதிகாரிகள் மற்றும் அதிமுக அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டத்தி்ல ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொருளாளர் உதயபழனி, மின்வாரிய தொழிலாளர் முன்னேற்ற பேரவையின் செயலாளர் அண்ணாத்துரை, பொதுக்குழு உறுப்பினர் கோதண்டராமன் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் மற்றும் திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT