தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகள்

விருதுநகர் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் குறைந்த 13 பள்ளிகளில் காரணத்தை கண்டறிந்து வரும் கல்வியாண்டு முதல் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க   நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் குறைந்த 13 பள்ளிகளில் காரணத்தை கண்டறிந்து வரும் கல்வியாண்டு முதல் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க   நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

பிளஸ்2 தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. இம்மாவட்டத்தில் மொத்தம் 193 பள்ளிகள் உள்ளன. இதில், 90 பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் சராசரியாக 95 சதவீதமாக இருக்கிறது. அதில், 13 அரசு மேல்நிலைப்பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது என பட்டியலிடப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் கூமாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர் திரு.வி.க.அரசு மேல்நிலைப்பள்ளி, கரிசல்குளம் ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் மேலகாந்திநகர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஆனைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, வீரசோழன் அரசு மேல்நிலைப்பள்ளி, எம்.ரெட்டியாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் கல்வி மாவட்டத்தில் திருத்தங்கல் எஸ்.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளி, சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி, நடையனேரி அரசு மேல்நிலைப்பள்ளி, விஜயகரிசல்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி, சங்கரலிங்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவைகள் 73 முதல் 88 சதவீதம் வரையில் பெற்று குறைந்துள்ளது.

எனவே வருங்கால்ங்களில் ஏன் இப்பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்தது என்கிற காரணத்தை கண்டறிய ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படும். மேலும், இப்பள்ளிகளில் நிகழாண்டு முதல் பின்தங்கிய மாணவ, மாணவிகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து கவனம் செலுத்தப்படும். அதன் அடிப்படையில் கடந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத நிலையில் உடனடித் தேர்வு எழுத இருக்கிற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் சிறப்பாசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கவும் தலைமையாசிரியர்களை வலியுறுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT