தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே இடி மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலை சேதம்

விருதுநகர் அருகே பகலில் மழை பெய்ததை தொடர்ந்து இடிமின்னல் தாக்கியதில் தனியார் பட்டாசு ஆலையில் ஒரு அறை சேதமடைந்தது.

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பகலில் மழை பெய்ததை தொடர்ந்து இடிமின்னல் தாக்கியதில் தனியார் பட்டாசு ஆலையில் ஒரு அறை சேதமடைந்தது.

விருதுநகர் அருகே மேலச்சின்னையாபுரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று 16 அறைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை இதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன்(35) என்பவர் நடத்தி வருகிறார். இந்த ஆலையில் சனிக்கிழமை வழக்கல் போல் காலையில் பணியாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 11.30 மணியளவில் பரவலான மழை பெய்ய தொடங்கியது. அதைத் தொடர்ந்து பணியாளர்கள் அனைவரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதையடுத்து, சிறிது நேரத்தில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததை தொடர்ந்து ஆலையில் உள்ள ஒரு அறையில் பட்டாசுகளில் தீ விபத்து ஏற்பட்டது.

இதை அந்த ஆலையின் பாதுகாவலர் உடனே பார்த்து அடுத்த அறைகளுக்கு தீ பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டார். இந்த விபத்தில் ஒரு அறையில் இருந்த பட்டாசுகள் மட்டுமே எரிந்து நாசமானது. இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT