முகப்பு
தற்போதைய செய்திகள்

குற்றவாளியுடன் சேர்ந்து திரையரங்கில் படம் பார்த்த போலீஸார்: 3 பேர் இடைநீக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபருடன் திரைப்படம் பார்த்த விவகாரம் தொடர்பாக 3 பேர் திங்கள்கிழமை இரவு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Updated On : 19 மே, 2015 at 10:13 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:03 AM

விழுப்புரம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபருடன் திரைப்படம் பார்த்த விவகாரம் தொடர்பாக 3 பேர் திங்கள்கிழமை இரவு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

புதுச்சேரி கன்னியாகோயில் பகுதியைச் சேர்ந்தவர் மதன்(22). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு விழுப்புரம் திரு.வி.க.வீதியில் மோட்டார் சைக்கிள் திருடியுள்ளார். அவரை அவ்வழியாக வந்த சிலர் பிடித்து விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது நகர போலீஸôர் அவர் புதுச்சேரியாக இருப்பதால் அவரிடம் விசாரித்துவிட்டு புதுச்சேரியில் எதாவது திருட்டில் ஈடுபட்டுள்ளரா என்று பார்ப்பதற்காக அவரை சீருடை அணிந்த 4 போலீஸார் ஜீப்பில் அழைத்துக் கொண்டு புதுச்சேரி கிளம்பினர்.

ஆனால் இவர்கள் புதுச்சேரி செல்லாமல் அந்த கைது செய்யப்பட்ட வாலிபரை அழைத்துக் கொண்டு விழுப்புரம் முருகா திரையங்கில் 36 வயதினிலே படம் பார்க்கச் சென்றுள்ளனர். கைதி ஒருவரை கைவிலிங்கிட்டு போலீஸாருடன் சேர்ந்த படம் பார்த்த விவகாரம் திரையரங்கில் அனைவரையும் வியப்படையச் செய்தது. இச் சம்பவத்தால் திரையரங்கம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

இச் சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நரேந்திர சிங், டி.எஸ்.பி சீத்தாராமன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைத் தொடர்ந்து திங்கள்கிழை நள்ளிரவு எஸ்.எஸ்.ஐ அழகேசன், போலீஸார் ஞானபிரகாசம், ராமச்சந்திரன் ஆகிய மூன்று பேர் இடைநீக்கம் செய்ய்பட்டனர்.

பொதுமக்கள் பிடித்து கொடுத்த நபரை பொது இடத்தில் கைவிலிங்கிட்டு பொதுமக்களுக்கு பீதி ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டின் அடிப்படையில் இம்மூவரை இடைநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். இதில் இதே காவல் நிலையத்தைச் சேர்ந்த மேலும் ஒரு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.