முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகடமி மாநில அளவில் 2, 3-வது இடம் பிடித்து சாதனை

திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகடமி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாநில அளவில் 2 வது மற்றும் 3-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:

திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகடமி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாநில அளவில் 2 வது மற்றும் 3-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 130 மாணவர்களும் தேர்ச்சி அடைந்து பள்ளி 100 சதவீத தேர்ச்சிபெற்றுள்ளது. மாணவர் குருஷாத் தமிழில் 99, ஆங்கிலத்தில் 99, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகியவற்றில் தலா 100 மதிப்பெண்கள் என மொத்தம் 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலம் மற்றும் மாவட்டத்தில் 2வது இடத்தையும், பள்ளியில் முதலாவது இடத்தையும் பிடித்துள்ளார். மாணவி மேகா தமிழில் 98, ஆங்கிலத்தில் 99, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகியவற்றில் தலா 100 மதிப்பெண்கள் என மொத்தம் 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலம் மற்றும் மாவட்டத்தில் 3வது இடத்தையும், பள்ளியில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார்.

மேலும் பள்ளியில் 29 மாணவர்கள் சமூக அறிவியலிலும், 51 மாணவர்கள் அறிவியலிலும், 16 மாணவர்கள் கணிதத்திலும், 1 மாணவர் ஆங்கிலத்திலும், 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பள்ளித்தாளாளர் மருத்துவர் அ.ராமமூர்த்தி, முதல்வர் இரா.செல்வவைஷ்ணவி, ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments