தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் தூக்கிட்டு சாவு

விருதுநகர் அருகே மனைவி இறந்த துக்கத்தினால் வேதனை அடைந்த முதியவர் ஒருவர் செவ்வாய்கிழமை இரவு தூக்கிட்டு உயிரிழந்தார்.

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே மனைவி இறந்த துக்கத்தினால் வேதனை அடைந்த முதியவர் ஒருவர் செவ்வாய்கிழமை இரவு தூக்கிட்டு உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே பந்தல்குடியைச் சேர்ந்தவர் விவசாயி கந்தசாமி(57). இவர் மனைவி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத நிலையில் உயிரிழந்தாராம். அதனால், மனைவியை அடிக்கடி நினைத்து மனவேதனையில் இருந்து வந்தாராம். இதையறிந்த அவரது சகோதரர் வீட்டிற்கு அழைத்துச் சென்று தங்க வைத்திருந்தாராம்.

இந்நிலையில், செவ்வாய்கிழமை வீட்டை விட்டு வெளியேறிச் சென்றவர் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து, உறவினர் வீடுகளிலும், தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் தேடிபார்த்தனர். அப்போது, கிராமத்திற்கு வெளியே வேப்ப மரத்தில் கயிற்றினால் தூக்கிட்டுக் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக பந்தல்குடி காவல் நிலையத்தில் சகோதரர் சுப்பிரமணி புகார் செய்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT