தற்போதைய செய்திகள்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பார்வர்டு பிளாக் ஆதரவு

சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளப்போவதாக அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநிலப் பொதுச் செயலரும்,

ஜெயப்பாண்டி

சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளப்போவதாக அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநிலப் பொதுச் செயலரும், உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினருமான பி.வி.கதிரவன் அறிவித்துள்ளார்.

மதுரையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்த பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ. கூறியதாவது: சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணையை எதிர்கொண்டு வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற அதிமுகப் பொதுச்செயலர் முதல்வர் ஜெயலலிதாவை பார்வர்டு பிளாக் வாழ்த்துகிறது.

சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதாவை ஆதரித்து பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொள்ளப்படும். அதிமுகவுக்கு ஆதரவான பிரசாரம் இடம் குறித்து கூட்டணி தலைவர்களுடன் கலந்தாலோசிக்கப்படும்.நேதாஜி சுபாஷ்சந்திரபோஸின் இறுதிக்காலம் குறித்த அறிக்கையை காங்கிரஸ் அரசு மறைத்த நிலையில், அதை வெளியிடுவதாக பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். ஆகவே விரைவில் அறிக்கையை வெளியிடவேண்டும்.

தமிழகத்தில் பெண் காவலர்கள் அளிக்கும் புகார்கள் குறித்து அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். பெண் காவலர் கூறும் பாலியல் புகார்கள் குறித்து சிறப்பு குழு அமைத்து விசாரிக்கவேண்டும்.நெல்லையில் குறிப்பிட்ட பகுதிக்குச் செல்லும் பஸ்களில் கண்காணிப்புக் காமிரா பொருத்தப்படுகிறது. அனைத்துப் பகுதி பஸ்களிலும் காமிரா பொருத்த அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றார்.

கூட்டத்திற்கு பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். வடிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT