குடும்பத் தகராறு: இளம் பெண் குழந்தையுடன் தீக்குளித்து சாவு:
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இளம் பெண் தனது இரு குழந்தைகளுடன் தீக்குளித்தார்.
தற்போதைய செய்திகள்குடும்பத் தகராறு: இளம் பெண் குழந்தையுடன் தீக்குளித்து சாவு:
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இளம் பெண் தனது இரு குழந்தைகளுடன் தீக்குளித்தார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இளம் பெண் தனது இரு குழந்தைகளுடன் தீக்குளித்தார்.
இதில் இளம் பெண் மற்றும் ஒரு பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. ஆண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், இந்திராநகரை அடுத்து என்.சண்முகசுந்தராபுரம் உள்ளது. இந்த இடத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி இசக்கிராணி (30). இவர்களுக்கு இரண்டரை வயதில் நித்யா என்ற பெண் குழந்தையும், ஒன்னரை வயதில் அருண்குமார் என்ற மகனும் உண்டு.
குடும்பதிதில் கணவன் மனைவிக்கிடையை அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 8.30 மணி அளவில் பிள்ளைகளுக்கும், தனக்கும் மண்ணெண்ணை ஊற்றி இசக்கிராணி தீ வைத்துக் கொண்டுள்ளார்.
இதில் பலத்த காயமுற்ற மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் சிவகாசி அரசு மருத்துவமனையில் தீ சிகிச்சை காயப் பிரிவில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படு சிகிச்சை பலனின்றி இசக்கிராணியும், நித்யாவும் உயிரிழந்தனர்.
அருண்குமாருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.