முகப்பு
தற்போதைய செய்திகள்

சீமான் பேச்சிற்கு எதிர்ப்பு: ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவு படுத்தி பேசி வருவதைக் கண்டித்து, ஞாயிற்றுக்கிழமை மதியம் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து மீது சிலர் கல் மற்றும் மதுபாட்டிலால் தாக்கியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:25 AM
பகிர்:

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவு படுத்தி பேசி வருவதைக் கண்டித்து, ஞாயிற்றுக்கிழமை மதியம் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து மீது சிலர் கல் மற்றும் மதுபாட்டிலால் தாக்கியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், குறிப்பட்ட ஒரு சமுதாயத்தை பொதுக்கூட்டங்களில் இழிவு படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வந்தாராம். இந்நிலையில் தேனியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர் இது குறித்து சீமானிடம் செல்லிடைபேசியில் கேட்ட போது, சீமான் ஜெகசீசனை இழிவாக பேசிய உரையாடல் வாட்ஸ்அப்பில் வேகமாக பரவியது.

இதனால் ஆத்திரமுற்ற சீமானின் ஆதரவாளர்கள் ஜெகதீசனைத் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார்.இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நாயுடு-நாயக்கர் இளைஞர் பேரவை என்ற அமைப்பு ஞாயிற்றுக்கிழமை உருவாக்கப்பட்டு, அதன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டம் முடிந்து வந்த சிலர், ராஜபாளையத்திலிருந்து மம்சாபுரம் வழியே ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து மீது மது பாட்டில் மற்றும் கற்களை வீசியுள்ளார்கள். இதில் பேருந்தின் முன்புறக் கண்ணாடி உடைந்தது.

 இது குறித்து பேருந்தை ஓட்டி வந்த சேகர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிலரைப் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →