முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை: 5 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் பாதிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் அறுவடை செய்ய முடியாமல்  பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:26 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் அறுவடை செய்ய முடியாமல்  பாதிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளதால், மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இதனிடையே கார் பருவத்தில் தாமதமாக நடவு செய்த கோபாலசமுத்திரம், பிரான்சேரி, மேலச்செவல், சங்கன்திரடு, கல்லூர் பகுதியில் அறுவடை பருவத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கி அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.

திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை( மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை 11, பாபநாசம் கீழ் அணை 4, சேர்வலாறு அணை 2, மணிமுத்தாறு அணை 12.4, கடனாநதி அணை 2, ராமநதி அணை 8, கருப்பாநதி அணை 11, குண்டாறு அணை 7.1, நம்பியாறு அணை 23, கொடுமுடியாறு அணை 10. பிற பகுதியில் பதிவான மழை: தென்காசி 7.8, செங்கோட்டை 9, ஆய்க்குடி 30.2, ஆலங்குளம் 4.2, ராதாபுரம் 40, நான்குனேரி 28, களக்காடு 5.6, மூலக்கரைப்பட்டி 14.2, பாளையங்கோட்டை 5.4, திருநெல்வேலி 2.1, சங்கரன்கோவில் 1.2, சிவகிரி 2, அம்பாசமுத்திரம் 2, சேரன்மகாதேவி 1.3, கன்னடியன் அணைக்கட்டு 2, ஸ்ரீவைகுண்டம் 5.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1021.64 கனஅடி, சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 550 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 423 கனஅடி, கடனாநதி அணைக்கு விநாடிக்கு 116.18 கனஅடி, ராமநதி அணைக்கு 70.53 கனஅடி, கருப்பாநதி அணைக்கு 122 கனஅடி, அடவிநயினார் அணைக்கு 47 கனஅடி, வடக்குப்பச்சையாறு அணைக்கு 28 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 38.55 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்து வருவதால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் மூடப்பட்டுள்ளன. 

நீர்மட்டம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 81.30 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 97.51 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 64.25 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 71 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 1.75 அடி உயர்ந்து 71 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 2.42 அடி உயர்ந்து 67.92 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 102.50 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 19.50 அடியாகவும் இருந்தது.

கடனாநதி, ராமநதி அணைகள் நிரம்புகிறது

நீர்பிடிப்பு பகுதியில் நீடித்து வரும் மழையால் கடனாநதி, ராமநதி அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 10 தினங்களில் இவ்விரு அணைகளின் நீர்மட்டம் தலா 30 அடி உயர்ந்துள்ளது. 84 அடி கொள்ளளவு கொண்ட இவ்விரு அணைகளும் ஒரு சில தினங்களில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாமிரவருணி பாசனத்தில் பிசான பருவ சாகுபடியை தொடங்க விவசாயிகள் தயாராகி வருகின்றனர். எனவே பாசனத்துக்கு வரும் 5 ஆம் தேதி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →