அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி: ஒருவர் கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பி.இ. பட்டம் முடித்தவருக்கு அரசுப் போக்குவரத்துக்க கழகத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகக்
தற்போதைய செய்திகள்அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி: ஒருவர் கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பி.இ. பட்டம் முடித்தவருக்கு அரசுப் போக்குவரத்துக்க கழகத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகக்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பி.இ. பட்டம் முடித்தவருக்கு அரசுப் போக்குவரத்துக்க கழகத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்த ஒருவரை போலீஸார் இன்று கைது செய்தனர். மேலும் இருவரைத் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர், பேட்டைக்கடைத் தெருவைச் சேர்ந்தவர் சு.செல்வராஜ் (58). இவரது மகன் செந்தில்நாதன். பி.இ. முடித்துள்ளார். இவருக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்குவதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த கருப்பையாத் தேவர் மகன் முனியசாமி என்பவரை அணுகியுள்ளார்கள். இவர் சிவகாசி-ஈஞ்சார்-நடுவப்பட்டியைச் சேர்ந்த ரா.வீரையா (55) என்பவரை இது தொடர்பாக அறிமுகம் செய்து வைத்து அவரைப் பார்க்கச் சொல்லியுள்ளார்.
வீரையா தனக்கு சென்னையில் அதிகமாக ஆட்கள் உள்ளதாயும், ரூ.8 லட்சம் கொடுத்தால், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் உதவிப் பொறியாளர் வேலை வாங்கித் தருவதாயும் கூறியுள்ளார். மேலும் முதல் தவணையாக ரூ.3 லட்சம் கேட்டுள்ளார்.
இதன் பேரில் 27.12.14-ம் தேதி ரூ.1 லட்சமும், 16.2.15-ம் தேதி ரூ.2 லட்சமும் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செல்வராஜ் செலுத்தியுள்ளார். ஆனால் குறிப்பிட்டபடி வேலை வாங்கித் தரவில்லையாம். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் செல்வராஜ் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து வீரையாவைக் கைது செய்தனர். மேலும் ஈஞ்சார் தங்கவேல் மகன் வீராச்சாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் முனியசாமி ஆகிய இருவரையும் போலீஸார் தேடி வருகிறார்கள்.