முகப்பு
தற்போதைய செய்திகள்

கார் மரத்தில் மோதி ஒருவர் சாவு: நால்வர் காயம்

ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுபோதையில் காரை ஓட்டி வந்து, கார் மரத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் நால்வர் காயம் அடைந்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:36 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுபோதையில் காரை ஓட்டி வந்து, கார் மரத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் நால்வர் காயம் அடைந்தனர்.

விருதுநகர், ஐ.சி.ஐ. காலனி, வாடியான் தெருவைச் சேர்ந்தவர் தங்கம் மகன் பாலாஜி (எ) நாகராஜ் (31). இவரது அக்காள் கணவர் சென்னை, நங்காநல்லூர் எஸ்.ஐ.டி. காலனியைச் சேர்ந்த தீனதயாள் மகன் சிவராஜ், மற்றும் உறவினர்கள் விருதுநகரைச் சேர்ந்த விஜயகுமார் மகன் ராகுல் (16), முருகன் மகன் சூரியா (எ) ஜெகதீஸ் (22) ஆகியோர் காரில் குற்றாலம் சென்றுள்ளார்கள். காரை உறவினரான முருகேசன் மகன் சிவராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குற்றாலத்திலிருந்து விருதுநகர் திரும்புவதற்காக, ராஜபாளையம்-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் எம்.பி.கே.புதுப்பட்டி விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது, கார் சாலை ஓரம் இருந்த மரத்தில் மோதியது.

இதில் வண்டியில் பின்னால் அமர்ந்து வந்த பாலாஜி (எ) நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காரில் வந்த ஏனைய நால்வரும் பலத்த காயம் அடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடைபெற்றபோது, காரை ஓட்டி வந்தவர் உள்ளிட்ட அனைவரும் மது போதையில் இருந்ததாக போலீஸார் கூறினர். இது குறித்து வன்னியம்பட்டி போலீஸார் காரை ஓட்டி வந்த சிவராமகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →