காவல் துறை மண்டலங்களுக்கிடையிலான நீச்சல், மாரத்தான் போட்டி: சென்னை மாநகர காவல் துறை சாம்பியன்
ஸ்ரீவில்லிபுத்தூர்.தமிழ்நாடு காவல் துறை மண்டலங்களுக்கிடையை மாநில அளவில் கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில்
தற்போதைய செய்திகள்காவல் துறை மண்டலங்களுக்கிடையிலான நீச்சல், மாரத்தான் போட்டி: சென்னை மாநகர காவல் துறை சாம்பியன்
ஸ்ரீவில்லிபுத்தூர்.தமிழ்நாடு காவல் துறை மண்டலங்களுக்கிடையை மாநில அளவில் கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில்
தமிழ்நாடு காவல் துறை மண்டலங்களுக்கிடையை மாநில அளவில் கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இரு நாட்கள் நடைபெற்ற நீச்சல் மற்றும் மாரத்தான் போட்டியில் சென்னை மாநகர காவல் துறை சாம்பியன் பட்டம் வென்றது.போட்டிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.
பரிசளிப்பு விழா பல்கலைக்கழகத்தின் டாக்டர் கே.எஸ்.கிருஷ்ணன் கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு தென்மண்டல காவல் துறைத் தலைவர் டாக்டர் எஸ்.முருகன் தலைமையில், மதுரை சரக காவல் துணைத் தலைவர் ஆனந்தகுமார் சோமானி முன்னிலையில் நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் வரவேற்றார்.பல்கலைக்கழக துணை வேந்தர் ச.சரவணசங்கர், தமிழ்நாடு காவல் சிறப்பு பட்டாலியன் 6-வது அணி கட்டளை அதிகாரி பால்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கோப்பை, பரிசு ஆகியவற்றை வழங்கி தென்மண்டல காவல் துறைத் தலைவர் டாக்டர் எஸ்.முருகன் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: சமீபத்தில் காவல் சார்பு ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு நடைபெற்றது. இதில் விளையாட்டுப் பிரிவுக்கு போதுமான நபர்கள் கிடைக்கவில்லை. தமிழக அரசு விளையாட்டு வீரர்களை பல்வேறு வகையில் ஊக்குவித்து வருகிறது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதுபோல விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.
நீச்சல் போட்டியில் 1500 மீட்டரில் சென்னை மாநகர காவலர் கே.சதீஷ், கமாண்டோ படையின் பி.சங்கர், ஆயுதப்படையின் கே.பாலமுருகன் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். 100 மீட்டர் பட்டர் பிளை நீச்சல் போட்டியில் சென்னை மாநகர காவலர்கள் எச்.ஜெயக்குமார், கே.கேசவன், கமாண்டோ படையின் எம்.கோவிந்து ஆகியோர் முறையை முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.
800 மீட்டர் ப்ரி ஸ்டைல் நீச்சல் போட்டியில் சென்னை மாநகர காவலர் கே.சதீஷ், ஆயுதப்படையின் கே.பாலமுருகன், கமாண்டோ படையின் பி.சங்கர் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். மொத்தம் 25 வகையான போட்டிகள் நடைபெற்றது.
இதில் மொத்தமாக 35 புள்ளிகள் எடுத்து சென்னை மாநகர காவலர் கே.சதீஷ், கமாண்டோ படையின் எம்.விமல் ஆகியோர் தனி நபர் சாம்பியன் பட்டம் வென்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் அ.சி.வெள்ளையன் நன்றி கூறினார்.