முகப்பு
தற்போதைய செய்திகள்

புது தில்லி-சான்ஃபிரான்சிஸ்கோவுக்கு நேரடி விமான சேவை நாளை தொடக்கம்

புதுதில்லியிலிருந்து அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சான்ஃபிரான்சிஸ்கோ நகருக்கு 16 மணி நேரம் 45 நிமிஷங்கள் கொண்ட நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் புதன்கிழமை (டிச.2) தொடங்கவுள்ளது.

Updated On : 30 நவம்பர், 2015 at 8:52 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:10 PM

புதுதில்லியிலிருந்து அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சான்ஃபிரான்சிஸ்கோ நகருக்கு 16 மணி நேரம் 45 நிமிஷங்கள் கொண்ட நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் புதன்கிழமை (டிச.2) தொடங்கவுள்ளது.

வாரந்தோறும் புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படவுள்ள ஏஐ173 விமானம் புது தில்லி விமான நிலையத்திலிருந்து  இந்திய நேரப்படி அதிகாலை 2.45 மணிக்கு புறப்பட்டு கலிஃபோர்னியா நேரப்படி காலை 6 மணிக்குச் சென்றடையும்.  சென்னையில் உள்ள பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக ஏஐ043 என்ற விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விமானம் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு புதுதில்லி விமான நிலையத்தைச் சென்றடையும். புதிய சேவை தொடங்கப்பட்டதை முன்னிட்டு இந்த விமானத்தில்  பயணம் செய்வோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.