ஷத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அறம் செய விரும்பும் வார விழா
விருதுநகர் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் அறம் செய விரும்பு வாரவிழாவை முன்னிட்டு புதன்கிழமை பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊரவலமும் நடைபெற்றது.
விருதுநகர் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் அறம் செய விரும்பு வாரவிழாவை முன்னிட்டு புதன்கிழமை பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊரவலமும் நடைபெற்றது.
இப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் ராமசந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் ஆனந்தவேல் முன்னிலை வகித்தார். இதில், விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் பங்கேற்று பேசுகையில், ஆண்டுதோறும் நமக்காக வாழ்கிறோம். அதில், அக்.2ம் தேதி முதல் 8-ம் தேதி வரையில் பிறர்க்காக உதவி செய்யும் வகையிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஆகியவைகளை மாணவிகள் ஏற்படுத்த வேண்டும்.
இதற்காகவே அறம் செய விரும்பு வாரவிழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதில், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும், அது தொடர்பான தீமைகள் குறித்து விளக்கமாகவும் எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து மாணவிகள் 600 பேருக்கு துணிப்பைகைகளையும் வழங்கினார்.
பின்னர் இப்பள்ளியின் சாரண, சாரணீயர், நாட்டுநலப்பணித்திட்டம், ஜே.ஆர்.சி, பசுமைப்படை மாணவிகள் சார்பில் பிளாஸ்டிக் தீமை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமும் நடைபெற்றது. மேலும், இது தொடர்பான துண்டுபிரசுரங்களையும் கடைகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு வழங்கினர். இதற்கான ஏற்பாடுகள் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் செய்திருந்தனர்.