தனியார் நிறுவனங்கள் காலி பணியிடம் இடம் இருப்பின் விவரத்தை பதிவு செய்யலாம்
தனியார் நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தில் காலிப் பணியிடம் இருப்பின் அதனை பதிவு செய்து வைத்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேர்காணல் நடத்தி அதன் மூலம் தகுதியான நபர்களை தேர்வு செய்யலாம்.
தற்போதைய செய்திகள்தனியார் நிறுவனங்கள் காலி பணியிடம் இடம் இருப்பின் விவரத்தை பதிவு செய்யலாம்
தனியார் நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தில் காலிப் பணியிடம் இருப்பின் அதனை பதிவு செய்து வைத்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேர்காணல் நடத்தி அதன் மூலம் தகுதியான நபர்களை தேர்வு செய்யலாம்.
தனியார் நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தில் காலிப் பணியிடம் இருப்பின் அதனை பதிவு செய்து வைத்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேர்காணல் நடத்தி அதன் மூலம் தகுதியான நபர்களை தேர்வு செய்யலாம்.
இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தனியார் துறையில் வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கும் பொருட்டு வேலை நாடுநர்களுக்காக மாதந்தோறும், தனியார் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்பட்டு வருகிறது.
வேலையளிப்போர் தங்களது நிறுவனத்தில் காலியிடம் இருப்பின், பதவியின் பெயர், கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம் உள்ளிட்ட விவரங்களுடன் கடிம் மூலமாகவோ அல்லது deovirudhunvagar@gmail.com என்ற ஈ-மெயில் முகவரிக்கோ அனுப்பலாம். பின்னர் ஒரு குறிப்பிட்ட நாளில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேர்காணல் தேர்வு மூலம் வேலையளிப்போர் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யலாம்.
மேலும், தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பணி நியமனம் பெறும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.