முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், இக் காலத்தில் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் குறித்து ஆட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:59 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், இக் காலத்தில் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் குறித்து ஆட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள குளிர் சாதனப் பெட்டிகள், ஏ.சி. போன்றவைகளில் இருந்து வெளியேறும் நீர் தேங்கா வண்ணம் அகற்றிட வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் தேங்கும் தண்ணீர் மூலமும், வைரஸ் காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. எனவே, குளிர்சாதனப் பெட்டிகளில் தண்ணீர் தேங்கா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசு நல்ல தண்ணீரின் மூலம் பரவுகிறது. மழை காலங்களில் வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் நீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை வாரம் ஒரு முறையாவது கழுவி சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். கொசுக்கள் உள்ளே புகா வண்ணம் மூடிவைக்க வேண்டும்.

சுற்றுப்புறத்தில் உள்ள தேவையற்ற மண்பாண்டங்கள், உரல்கள், பழைய பாட்டில்கள், டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றில் நல்ல நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளவதன் மூலம் கொசு உற்பத்தியை தடுக்கலாம். வீட்டில் உள்ள கீழ்நிலை நீர் சேமிக்கும் தொட்டியை கொசு புகாமல் மூடி வைப்பதன் மூலமும் கொசு உற்பத்தியை தடுக்க முடியும்.பள்ளி மாணவ மாணவிருக்கு கல்வி நிலையங்களில் வைரஸ் காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது என்றும், தங்களது வீடுகளைச் சுர்றி தண்ணீர் தேங்காமல் சுத்தமாக பராமரிப்பது குறித்து எடுத்துக்கூறி மாணவர்கள் மத்தியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு உறுதி மொழி ஏற்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல் கண்டவர்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளை காய்ச்சல் வந்த அன்றே அணுகி, காய்ச்சல் தொடர்பான அனைத்து மருத்துவ பரிசோதனைகளும், சிகிச்சை முறைகளும் இலவசமாக பெறலாம். மருத்தவர்களின் ஆலோசனை இல்லாமல் தாங்களாகவே மருந்துகள் வாங்கி உட்கொள்ளக் கூடாது. மருந்துக் கடைகளில் மருத்துவரின், மருந்துச் சீட்டு இல்லாமல் எவ்வித காய்ச்சலுக்கும் மருந்துகள் வழங்கக் கூடாது.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை பரிசோதனை செய்து தரமான சிகிச்சை வழங்கவும், சிகிச்சைக்குத் தேவையான அனைத்து வகையான மருந்துவ உபகரணங்கள், மருத்துவர்கள் மற்றும் மருந்துகள் தயார் நிலையில் உள்ளன.பொதுமக்கள் வைரஸ் காய்ச்சல் குறித்து எவ்வித அச்சமும், பயமும் கொள்ளத் தேவையில்லை என மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாராமன் செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →