முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க  ஆட்சித் தலைவர் நடவடிக்கை

விருதுநகர்.விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி, வைரஸ் காய்ச்சல் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு

தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க  ஆட்சித் தலைவர் நடவடிக்கை

விருதுநகர்.விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி, வைரஸ் காய்ச்சல் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:01 AM
பகிர்:

விருதுநகர்.விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி, வைரஸ் காய்ச்சல் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுட்டுள்ளது என்றும், குறிப்பாக டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செவ்வாய்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ரத்த பரிசோதனைகளுக்கும், சிகிச்சை முறைகளுக்கும் தேவையான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, சுய மருத்துவம் எடுக்கக் கூடாது என்றும், போலி மருத்துவர்களிடம் சிகிச்சைக்குச் செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.ராஜபாளையம் பூபால்பட்டி தெருவில் மணி (எ) பாலசுப்பிணியம் என்பவர் 10-ம் வகுப்பு படித்துவிட்டு ஆங்கில மருத்தவம் செய்வதாக பெறப்பட்ட தகவலின் பேரில், ராஜபாளையம் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதேபோன்று நரிக்குடியில் மருதுபாண்டியர் தெருவில் அச்சுராஜ் (58), பாலு (45) என்பவரும் ஊசி மூலம் சிகிச்சை அளிப்பது தெரிந்து, மருத்துவம் மற்றும் ஊரகநலப் பணிகள் மற்றும் குடும்பநலம் துணை இயக்குநர் முத்துவீரலட்சுமி இருவரையும் பிடித்து காவல் துறையில் ஒப்படைத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் காய்ச்சலுக்கும் பிற நோய்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும், தாமாக சிகிச்சை செய்து கொள்வதையும், போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →