பெண்ணை மானபங்கம் செய்து மிரட்டியதாக வழக்குரைஞர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்ணை மானபங்கம் செய்து மிரட்டியதாக வழக்குரைஞர் உள்ளிட்ட ஆறு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தற்போதைய செய்திகள்பெண்ணை மானபங்கம் செய்து மிரட்டியதாக வழக்குரைஞர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்ணை மானபங்கம் செய்து மிரட்டியதாக வழக்குரைஞர் உள்ளிட்ட ஆறு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்ணை மானபங்கம் செய்து மிரட்டியதாக வழக்குரைஞர் உள்ளிட்ட ஆறு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர், அசோக்நகரில் குடியிருந்து வருபவர் ஜாபர் சித்திக் மனைவி ரேபேக்கா (40). இவரது கணவருக்குச் சொந்தமான அசோக்நகரில் உள்ள வீட்டை திருவண்ணாமலையைச் சேர்ந்த கருப்பையா மகன் மருதுபாண்டி என்பவர் போலியாக ஏமாற்றி வாங்கியுள்ளார். இது குறித்து காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியதையடுத்து விசாரணை நடைபெற்றுள்ளது. விசாரணைக்கு மருதுபாண்டியை அழைக்கும் போதெல்லாம் ஏமாற்றி வராமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் ஜாபர் சித்திக் உடல் நலக்குறைவு காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவருக்கு சமைத்து எடுத்துச் செல்வதற்காக வீட்டில் ரேபேக்கா சமைத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது வீட்டினுள் அத்துமீறி நுழைந்த மருதுபாண்டி, கோட்டைப்பட்டியைச் சேர்ந்த வழக்குரைஞர் செல்வின்ராஜூ மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 4 பேர், ரேபேக்காவை மானபங்கம் செய்து கீழே தள்ளிவிட்டு, காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவை வாபஸ் பெறாவிட்டால் இருவரையும் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டினார்களாம். இது குறித்து ரேபேக்கா ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் மருதுபாண்டி, வழக்குரைஞர் செல்வின்ராஜூ உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.