முகப்பு
தற்போதைய செய்திகள்

போலீஸாரை கத்தியால் குத்த முயன்று தப்பி ஓடிய ரௌடி

ஸ்ரீவில்லிபுத்தூரில், போலீஸாரை கத்தியால் குத்த முயன்றுவிட்டு தப்பி ஓடிய ரௌடியை போலீஸார் தேடி வருகிறார்கள்.

தற்போதைய செய்திகள்

போலீஸாரை கத்தியால் குத்த முயன்று தப்பி ஓடிய ரௌடி

ஸ்ரீவில்லிபுத்தூரில், போலீஸாரை கத்தியால் குத்த முயன்றுவிட்டு தப்பி ஓடிய ரௌடியை போலீஸார் தேடி வருகிறார்கள்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:03 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில், போலீஸாரை கத்தியால் குத்த முயன்றுவிட்டு தப்பி ஓடிய ரௌடியை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ராஜாபாளையம், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் பிரபல ரௌடி ரமேஷ் (40). இவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. இரு நாட்களுக்கு முன்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்குள் சந்தேகப்படும் வகையில் ரமேஷ் நடமாடியுள்ளார். இந்நிலையில் இன்று இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு பணிக்காக மம்சாபுரம் காவல் நிலைய காவலர் ராஜா வந்துள்ளார். இவர் ரௌடியைப் பார்த்தவுடன் அவரை பிடிக்க முயன்றுள்ளார்.

ஆனால் ரமேஷ் தனது பையிலிருந்து கத்தியை எடுத்து போலீஸாரை குத்த முயன்றுள்ளார். அவர் அதை தட்டிவிட்டு, அவனை பிடிக்க முயன்றபோது தப்பி ஓடிவிட்டான். சம்பவம் பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் நகர் காவல் நிலையத்திற்கு காவலர் ராஜா தகவல் கொடுத்தார். அதன் பேரில் ஏராளமான போலீஸார் அரசு மருத்துவமனையில் சோதனையிட்டனர். ஆனால் ரௌடி தப்பிவிட்டார். இவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →